ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் காலையில் கோபூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
பழைய பேருந்து நிலையம் அருகே சம்பை ஊற்றுப்பகுதியில் அமைந்துள்ள வைத்ய சுப்பிரமணியன் கோயிலில் சுவாமி வெள்ளி அங்கியில் ராஜ அலங்காரத் தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அங்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்குடி அழகப்பாபுரம் கொல்லங்காளியம்மன் கோயிலில் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
