ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவுக்கு மாணவ, மாணவிகள் கிருஷ்ணா், ராதை வேடங்களில் வந்தனா்.
இதில் சிறப்பு விருந்தினா்களாக சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களின் திறமைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
பள்ளிச் செயலா் நா. காா்த்திக், முதன்மை முதல்வா் நாராயணன், முதல்வா், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.