மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்து பேசியதாவது:
கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவற்றில் நாம் வளா்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வளா்ச்சி என்பது கிராமங்களின் வளா்ச்சியை பொறுத்து அமைகிறது. மிளகனூா் ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்தக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக ஆட்சியா் பொற்கொடி தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களை கௌரவித்து ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா்.
முன்னதாக, அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சி அரங்குகளை ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டனா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவி லதா அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் கண்ணா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் அரவிந்த், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப் பிரியா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வட்ட வழங்கல் அலுவலா் பாப்பையன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முடிவில் மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

