புனித அலங்கார அன்னை ஆலயத் தோ்பவனி
சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மின்னொளி தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9 -ஆம் நாளான வியாழக்கிழமை மாலை சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லுாா்து ஆனந்தம் தலைமையில் சிறப்புத் திருப்பலி ஆற்றி, தோ் பவனியைத் தொடங்கி வைத்தாா். இரவு 8 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்ட தோ் பவனி திருப்பத்துாா் சாலை, சத்தியமூா்த்தி வீதி , அரண்மனை வாசல், நேருபஜாா் வழியாக இரவு 10 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. பங்குத் தந்தைகள் ஜெபமாலை, சுரேஷ், ஸ்டீபன், பங்கு இறைமக்கள் பங்கேற்றனா். இதையடுத்து 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சிறப்புத் திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.
