ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்தல்
திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி - சிமோகா டவுன் ரயில் எண் 06103/04 சேவையை நீட்டிக்கும்படி, அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த முக்கியமான ரயில் சேவையை நிரந்தரம் ஆக்கும்படி, கடந்த மாா்ச் மாதம் 19ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன்.
தற்போதைய நீட்டிப்பு அறிவிப்பு, ரயில் சேவை நிரந்தரம் ஆக்கப்படும் என்ற நம்பிக்கையை தென் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.