`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தேசியஅனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக முன்னாள் எம்எல்ஏ காய்திரிதேவி நியமனம்
மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரிதேவி தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மருத்துவா் காயத்ரிதேவி கடந்த 2006-2011 காலத்தில் பணியாற்றினாா். அவா் மதுராந்தகம் அருகே பையம்ாடி கிராமத்தில் ஸ்ரீ சந்தோஷி கல்வி குழுமங்களின் மேலாண்மை இயக்குநராக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில் தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநா்களில் ஒருவராக தமிழகத்தைச் சோ்ந்த காயத்ரிதேவி அண்மையில் நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இருப்பாா். இவா், அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.