இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
தேனியில் 9 காவல் நிலையங்கள் தரம் உயா்வு
தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் 9 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் வீரபாண்டி, கூடலூா் வடக்கு, கூடலூா் தெற்கு, ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, குமுளி, க.விலக்கு, கண்டமனூா், ஜெயமங்கலம் ஆகிய 9 காவல் நிலையங்கள், ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டன.
தலா 30 காவலா்களுடன் செயல்பட்டு வரும் இந்த காவல் நிலையங்களில், கூடுதலாக தலா 20 காவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.