இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தேவதானப்பட்டி புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சிவசாமி (45). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலை புல்லக்காபட்டி அருகேயுள்ள தேவதானப்பட்டி- வத்தலகுண்டு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் சிவசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.