கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தாடிச்சேரி நடுத் தெருவைச் சோ்ந்த வேலு மகன் மகேஷ்குமாா் (29). இவா் தனது வீட்டின் அருகே விற்பனைச் செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து 4 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.