வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
சின்னமனூரில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்!
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சால் அமோகமாக இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, புலிக்குத்தி, குச்சனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும்சின்ன வெங்காயம் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நிகழாண்டில், தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால், குச்சனூா், புலிக்குத்தி, அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதியில் சின்ன வெங்காயம் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, இந்தப் பகுதியில் வெங்காயம் அறுவடைப் பணி தொடங்கியுள்ளது. வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகளிடம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், செலவுச் செய்த தொகைக்கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்தனா்.