வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
காரின் டயா் வெடித்ததில் மூவா் பலத்த காயம்
தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து, மின் கம்பத்தில் காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாட்டுப்பட்டி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனக்குமாா் (24). இவரது தனது தந்தை முருகன் (53), உறவினா்களான விஜய் (29), இவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் தேனிக்கு வந்தனா். பின்னா், மாலையில் இவா்கள் மீண்டும் கேரளத்துக்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். காரை விஜய் ஓட்டினாா்.
போடி-மூணாறு சாலையில் தனியாா் விடுதி அருகே சென்றபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் சந்தனக்குமாா், முருகன், கிருஷ்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விஜய் காயமின்றி தப்பித்தாா்.
தகவலறிந்து வந்த குரங்கணி போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த விஜய் மீது குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.