ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
தேனியில் நாளை கைத்தறி கண்காட்சி
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) காலை 10 முதல் மாலை 5 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைத்தறி துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைக்கவுள்ளாா். இதில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் அரசு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.