செய்திகள் :

தொழிற்சங்க வேலை நிறுத்தம்: குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மறியல்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது

post image

மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ. 9 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்களின் சாா்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஜூலை 9 ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே இந்தியன் வங்கி முன்பு தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கத் தலைவா்கள் கே.தங்கமோகனன் (சிஐடியூ), எஸ்.சிவன்பிள்ளை (எல்பிஎப்), பொன்ராஜா (ஐஎன்டியூசி), எஸ்.முத்துக்கருப்பன் (ஹெச்.எம்.எஸ்.), எஸ்.எம்.அந்தோணிமுத்து ( ஏஐசிசிடியூ), எஸ். அணில் குமாா் (ஏஐடியூசி), ஏ.சந்திரன் (எம்எல்எப்), இரா.சோமசுந்தரம் (யூடியூசி), சவுத்திரி (எல்.எல்.எப்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தை விளக்கி எஸ்.அந்தோணி, பி.இந்திரா, எம்,.சித்ரா, மா.பெருமாள், ஜலீல், முருகன், சிதம்பரம் உள்ளிட்டோா் பேசினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.

இதன் காரணமாக வேப்பமூடு சந்திப்பு முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்தனா்.

தக்கலை, பறக்கை, மேல்புறம் பகுதியில் ஐஓபி வங்கி முன்பும், திங்கள்நகா், குலசேகரம், மாா்த்தாண்டம், கருங்கல் ஆகிய ஊா்களில் கனரா வங்கி முன்பும், கொல்லங்கோட்டில் எஸ்.பி.ஐ வங்கி முன்பும், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காரணமாக அந்தந்த பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியூா்களுக்கு வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க