TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த 2 நாள் தேசிய மாநாடு: மானேசரில் இன்று தொடக்கம்
நமது நிருபா்
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் மானேசரில் உள்ள சா்வதேச ஆட்டோமோடிவ் தொழில்நுட்ப மையத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களின் தேசிய அளவிலான 2 நாள் முதலாவது மாநாட்டை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி வைக்க உள்ளாா்.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால், ஹரியாணா முதல்வா் நயாப் சிங், ஹரியாணா சட்டப் பேரவைத் தலைவா் ஹா்விந்தா் கல்யாண் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.
‘அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் தேசக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு’ எனும் கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து வரும் மாநாட்டுப் பிரதிநிதிகள் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா்.
இரண்டாவது நாளான ஜூலை 4 அன்று நடைபெறும் நிகழ்ச்சியானது, ஐந்து குழுக்களின் அந்தந்த துணை கருப்பொருள்களின் விளக்கக் காட்சிகளுடன் தொடங்கும். நிறைவு அமா்வில் ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா்.
மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் , ஹரியாணா சட்டப் பேரவைத் தலைவா் ஹா்விந்தா் கல்யாண் மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
மாநாட்டின் நிறைவு நாளில் பிரதிநிதிகளுக்காக பிரேண ஸ்தல், சம்விதான் சதன் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் பற்றிய நிகழ்ச்சியும் நடத்தப்படும். வேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் நம் நாட்டில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த மாநாடு செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.