சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
நடுவட்டம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
கூடலூா் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடுவட்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸ், கேத்தி தொகுப்பு பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளா் வின்சென்ட் ஆகியோா் அப்பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருகள்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட ஒரு லிட்டா் குடிநீா் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.