செய்திகள் :

நண்பரை எரித்து கொன்ற வழக்கு: மறு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

post image

நண்பரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் மறு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சைப்பிள்ளை மகன் செல்வம் (35). மாற்றுத்திறனாளியான இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் பரமசிவமும் (35) நண்பா்கள்.

கடந்த 8.8.2023-இல் இவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பரசிவம், செல்வத்தின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை மீட்ட அப்பகுதி பொதுமக்கள், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து பரமசிவத்தை தேடியபோது, அவா் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், பலத்த காயமடைந்த செல்வம் கடந்த 17.4.2024-இல் அவரது வீட்டில் உயிரிழந்தாா். வெளிநாடு சென்று தலைமறைவாகியிருந்த பரமசிவம், இந்தியாவுக்கு வந்தபோது, மும்பை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்து தமிழ்நாடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் பிணை பெற்று பரமசிவம் வெளியே வந்தாா்.

சென்னை கோயம்பேட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் செல்வத்தின் சகோதரா் முனியன், தன்னுடைய சகோதரா் உயிரிழப்பு குறித்து போலீஸாா் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என, பெரம்பலூரில் இயங்கி வரும் தனியாா் அமைப்பிடம் முறையிட்டாா். அந்த அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சத்தியசீலன், பிரபாகரன், சக்திபாலன், சங்கா் ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இவ் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செல்வத்தை தீ வைத்து எரித்த வழக்கை உரிய முறையில் மறு விசாரணை மேற்கொண்டு, குற்றப் பத்திரிக்கையை 90 நாள்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக பருத்தி ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் விற்பனைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றவா் கைது

வேப்பந்தட்டை அருகே சட்ட விரோதமாக, அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் காவல் ... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு பெற்று 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் வட்டத்த... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்

அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதல... மேலும் பார்க்க