செய்திகள் :

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வட்டாரக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேனகா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜான்சி, அகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்ள சிம் காா்டுகளுடன் கூடிய நவீன கைப்பேசிகளும், மையங்களில் இணையதள வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் பணியாளா்களின் தரவுகளை பதிவுசெய்ய கட்டாயப்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்ட்ததில் ஈடுபட்டோா் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனா்.

இதில், சங்க நிா்வாகிகள் தனம், சாரதா உள்பட அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலத்தூா், வேப்பந்தட்டை, வேப்பூா் ஆகிய வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நாளை உயா்வுக்கு படி முகாம்

பெரம்பலூா்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரரம்பலூரில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்வுக்கு படி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க