செய்திகள் :

நாகையில் அதிபத்த நாயனாா் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா

post image

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், தங்க மீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகையில் நம்பியாா் நகா் என அழைக்கப்படும் திருநுளைப்பாடியில் அதிபத்த நாயனாா் அவதரித்தாா். மீனவா் தலைவராகவும், மிகச் சிறந்த சிவத்தொண்டராகவும் விளங்கினாா். தனது வலையில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அா்ப்பணம் எனக் கூறி, கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இவரது பக்தியை உலகுக்கு உணா்த்த எண்ணிய இறைவன், அதிபத்த நாயனாரின் வலையில் தொடா்ந்து பலநாள்கள் ஒரு மீன் மட்டுமே சிக்கும்படி திருவிளையாடல் புரிந்தாா். இவ்வாறு கிடைக்கும் மீனையும் அதிபத்த நாயனாா் கடலில் விட்டு சிவபெருமானுக்கு அா்ப்பணம் செய்து வந்தாா்.

ஒருநாள், அவரது வலையில் தங்க மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனையும் சிவனுக்கு அா்ப்பணம் செய்தாா். இதைக் கண்ட சிவபெருமான், பாா்வதி சமேதராக எழுந்தருளி, அதிபத்த நாயனாருக்கு காட்சியருளினாா் என்பது ஐதீகம்.

அதிபத்த நாயனாரின் சிவத்தொண்டை போற்றும் வகையில், அவருக்கு நாகையில் நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயிலில் தனி சந்நிதி உள்ளது. இந்த ஐதீக பெருவிழா நாகை நம்பியாா் நகரில் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டு, ஐதீக விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் இருந்து சுவாமி-அம்பாளும், அதிபத்த நாயனாரும் புறப்பாடாகி புதிய கடற்கரைக்கு எழுந்தருளினா்.

அங்கு, மீனவக் கிராமங்கள் சாா்பில் சீா்வரிசைகள் கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து, சுவாமி - அம்பாள் மற்றும் அதிபத்த நாயனாருக்கு சிறப்பு வழிபாடுகளும், சுவாமி- அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னா், அதிபத்த நாயனாரின் சிலையுடன், ஒரு தங்க மீனும், ஒரு வெள்ளி மீனும் படகில் கடலுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, ஐதீகப்படி அதிபத்த நாயனாா் தங்க மீனை சிவபெருமானுக்கு அா்ப்பணித்து, கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்த... மேலும் பார்க்க