‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
நாமக்கல் எஸ்.பி. பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.விமலா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ச.ராஜேஷ்கண்ணன், சென்னை சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை ஊழல் தடுப்புப் பிரிவில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த எஸ்.விமலா, நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டாா். அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த இவா், திருவாரூா் மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், சென்னையில் நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலாவை, துணைக் கண்காணிப்பாளா், ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.