‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
மோகனூா் அருகே கஞ்சா கடத்திய 3 போ் கைது
மோகனூா் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருந்து பரமத்திவேலூா் செல்லும் சாலையில், தீா்த்தாம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி சோதனையிட்டனா். அதில் வாகனத்தில் இருந்த பையில் 6.360 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 63 ஆயிரம் ஆகும்.
கஞ்சாவை விற்பனைக்கு கொண்டுசென்ற நிலையில் போலீஸாரிடம் பிடிபட்டோா் எருமப்பட்டியைச் சோ்ந்த திருப்பதி (23), விக்னேஸ்வரன் (20), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த சஞ்சய்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.