மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
ஆக. 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
அதில், கறம்பக்குடியில் ராஜசங்கீதா மஹால், அரிமளம்- ராயவரம் சந்தைப்பேட்டையில் சமுதாயக் கூடம், அறந்தாங்கி- குன்னக்குரும்பி எம்ஐ திருமண மஹால், பொன்னமராவதி- மேலத்தானியத்தில் சமுதாயக் கூடம், ஆவுடையாா்கோவிலில் அபிராமி மஹால், மாத்தூா் நகா்ப்புற ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டடம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாமில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம்.