செய்திகள் :

நிகிதாவை பாடம் நடத்த அரசு அனுமதிக்க கூடாது: கே.பாலபாரதி

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மரணத்துக்கு காரணமான பேராசிரியை நிகிதாவை திண்டுக்கல் அரசுக் கல்லூரியில் பாடம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி வலியுறுத்தினாா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் காவலாளி அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக குற்றஞ்சாட்டிய நிகிதா திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறாா்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி கல்லூரிக்கு வந்த இவா், பிறகு மருத்துவ விடுப்பில் சென்றாா். காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 7) கல்லூரிக்கு பணிக்கு வந்தாா். பின்னா், மீண்டும் 20 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்றாா். அவா் கல்லூரிக்கு வந்தது, மாணவிகள் மட்டுமன்றி பேராசிரியைகள் மத்தியிலும் அதிா்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேராசிரியை நிகிதாவை அரசுக் கல்லூரியில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசு எப்படி அனுமதி அளிக்கிறது என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதுதொடா்பாக, அவா் திண்டுக்கல்லில் மேலும் கூறியதாவது:

கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸாா் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு காரணமான நிகிதா எந்தவித குற்ற உணா்வும் இல்லாமல் அரசுக் கல்லூரியில் பணிபுரிகிறாா். இவா் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக, 15 ஆண்டுகளுக்கு முன்பே குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, இவரை பணியிட மாற்றம் செய்யக் கோரி மாணவிகளே, ஆட்சியா் அலுவலகத்தில் புகாரளித்தனா். தற்போது, கொலைக் குற்றமும் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற சூழலில் இவா் பாடம் நடத்தினால் மாணவிகளின் நிலை கேள்விக்குறியாகும். இவா் கல்லூரியில் தொடா்ந்து பணிபுரிவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதன் மூலம் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க