ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
நியூ உஸ்மான்பூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் பெண் பலி!
வடகிழக்கு தில்லியின் பகத் சிங் காலனியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண் மஞ்சு ஜெயின் என அடையாளம் காணப்பட்டாா். நியூ உஸ்மான்பூரில் உள்ள பகத் சிங் காலனியில் உள்ள ஒரு வீட்டில் காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த அழைப்பின் பேரில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
வீட்டின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மஞ்சு ஜெயின் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.