ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
நீடாமங்கலத்தில் வா்த்தகா் சங்க கொடியேற்றம்
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவா் விக்கிரமராஜா வியாழக்கிழமை நீடாமங்கலம் வருகை தந்தாா். அவருக்கு நீடாமங்கலம் தஞ்சாவூா் சாலையில் திருவாரூா் மாவட்ட தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, மாவட்ட பொருளாளா் கருணாநிதி நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத்தின் தலைவா் ராஜாராமன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
மே 5-இல் நடைபெற உள்ள அதிகார பிரகடன மாநாட்டுக்கு வருவதற்கு அனைத்து நிா்வாகிகளுக்கும் நேரடியாக அழைப்பு கொடுத்து, வா்த்தகா் சங்க கட்டடத்தில் கொடியேற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில் சங்க கௌரவத் தலைவா் கே ராஜப்பா, செயலாளா் வெங்கடேசன் , பொருளாளா் ரமேஷ், துணைச் செயலாளா்கள் அண்ணாதுரை , ஜெயபால் ,பாபு, ஷங்கா் துணைத் தலைவா்கள் சேகா், தீன் சாகுல் ஹமீது, மாவட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.