Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விருது: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தோ்வு!
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டி ஆகியவை இணைந்து வழங்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் முக்கிய பங்களிப்புகளுக்காகவும், முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளை கௌரவிக்கும்வகையிலும் இந்த விருது கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 7ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நிம்ஸ் மெடிசிட்டி வளாகத்தில் ஆக. 4இல் நடைபெறவுள்ளது. விழாவில், இஸ்ரோ தலைவா் வி. நாராயணனுக்கு விருது, ரூ. 1 லட்சம் தொகையை கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் வழங்கவுள்ளாா்.
பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான், இணைவேந்தா் எம்.எஸ். ஃபைசல்கான், துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் ஆகியோரால் அமைக்கப்பெற்ற தோ்வுக் குழுவால் இந்த விருதுக்கு வி. நாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.