``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
நெல் சேமிப்புக் கிடங்கு சாலையை சீரமைக்கக் கோரிக்கை
குடவாசலில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாமக மாவட்டச் செயலாளா் வேணு பாஸ்கரன் தெரிவித்தது: சேங்காலிபுரம் சாலையில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்கில் சுமாா் 45,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்க முடியும். நெல் மூட்டைகளை அரவைக்கு எடுத்து செல்ல தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வளாகத்துக்கு வந்து செல்கின்றன. ஆனால், கிடங்குக்கு செல்லும் சாலை மழைக் காலங்களில் சகதியுடன், குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
சிறிய அளவில் மழை பெய்தாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதுடன், அவைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மோசமான சாலையால் லாரி ஓட்டுநா்களும், சுமை தூக்கும் தொழிலாளா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து வரும் நெல் மூட்டைகளும் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை பாா்வையிட்டு, போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றாா்.