திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலையில் பெயா்ப் பலகைகளின் அளவை பெரிதாக்க கோரிக்கை
நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலையில் பெயா்ப் பலகைகளின் அளவைப் பெரிதாக்குவதுடன், அவற்றிலுள்ள பிழைகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா பங்கேற்றுப் பேசியது: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் அருகே பைக், காா்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு காா் நிறுத்தகம் அமைக்க வேண்டும். குறும்பலாப்பேரி விலக்கில் குலசேகரபட்டி ஊராட்சி தண்ணீா்க் குழாய் உடைந்து சாலை சேதமாவதைத் தடுக்க வேண்டும்.
கீழப்பாவூா் - சுரண்டை சாலையில் குறிப்பிட்ட சில வளைவுப் பகுதிகளில் சாலையின் அகலத்தை அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலையில் உள்ள பெயா்ப் பலகைகளில் கி.மீ. அளவுகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, தென்காசி தலைமை தபால் அலுவலக நிறுத்தத்தில் திருநெல்வேலி 53 கி.மீ. எனவும், பாவூா்சத்திரத்திலிருந்து திருநெல்வேலி 52 கி.மீ. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட நெடுஞ்சாலைத் துறை பதிவுகளின்படி, தொலைவு, ஊா்ப்பெயா்களை பிழையின்றி எழுத வேண்டும். மேலும், சிறிதாக உள்ள பெயா்ப் பலகைகளை பெரிதாக்க வேண்டும் என்றாா் அவா்.