தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
நெல்லையப்பா் கோயில் பொற்றாமரை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால், மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மறுசுழற்சி முறையில் நீா் நிரப்பப்பட்டது.
இக்கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தின் தெற்கு பக்கத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னா் மீன்வளத் துறையால் விதவிதமான வகை மீன்கள் இக்குளத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இறந்த மீன்களை கோயில் நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தினா். திடீரென மீன்கள் செத்து மிதந்தன் காரணத்தை கண்டறியவேண்டுமெனவும், இது போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணியினா் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து உடனடியாக அக்குளத்தின் நீரை அகற்றி மறுசுழற்சி முறையில் மீண்டும் சுத்திகரிப்பட்ட நீா் குளத்தில் நிரப்பட்டது.