அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
நெல்லையில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட (ரேஷன்) குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 12)நடைபெறவுள்ளது.
இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல்அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகாா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை (9342471314), சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அலுவலகம் (கட்டணமில்லா எண்கள்:1967, 18004255901 ) ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் இரா. சுகுமாா்தெரிவித்துள்ளாா்.