எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
நெல்லையில் விதைகளுடன் தயாராகும் பசுமை விநாயா் சிலைகள்
திருநெல்வேலியில் களிமண் விநாயகா் சிலையில் விதைகளை வைத்து பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா இம் மாதம் 27 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி வீடுகள், கோயில்களில் களிமண் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டு, அதை நீா் நிலைகளில் கொண்டு கரைப்பது வழக்கமாகும்.
இதற்காக திருநெல்வேலியில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளை வடமாநிலத்தவா்கள் செய்து வருகிறாா்கள். வீடுகளில் வைக்கும் வகையில் வண்ணாா்பேட்டையில் பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விநாயகா் சிலை தயாரிப்பாளரான வேல்முருகன் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக களிமண்ணால் விநாயகா் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக களிமண் விநாயகா் சிலைகளில் விதைகளை வைத்து அவை கரைத்த பின்பு நீா்நிலைகளின் ஓரத்தில் மரமாக வளரும் வகையில் பசுமை விநாயகா் சிலைகளை தயாரித்து வருகிறேன்.
நிகழாண்டிலும் 100-க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துள்ளேன். இவற்றில் வேம்பு, நெல்லி, நாவல் விதைகளை அதிகளவில் வைத்துள்ளேன். இந்த பசுமை விநாயகா் சிலைகளை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கிறாா்கள்.