உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு விடுமுறை தினமான சனிக்கிழமை (ஜூன் 7) பக்ரீத் பண்டிகையாகும். அன்று ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது.
எனவே வரும் 7 ஆம் தேதி சனிக்கிழமை புறநோயாளிகள் ஜிப்மருக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.
எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.