சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
பண்ருட்டியில் விபத்துகளை தவிா்க்க சாலைத் தடுப்புகள் அமைப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக, 8 இடங்களில் புதிதாக நிரந்தர சாலைத் தடுப்புகளை அமைத்தனா்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக, வாழப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம் - மாளிகைமேடு சந்திப்பு சாலை, அண்ணா கிராமம் சந்திப்பு, கீழ்கவரப்பட்டு சந்திப்பு, பக்கிரிபாளையம், பக்கிரிபாளையம் சந்திப்பு, பணிக்கன்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளின் ஆபத்தான வளைவுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே என மொத்தம் 8 இடங்களில் புதிதாக நிரந்தர சாலை தடுப்புகளை அமைத்தனா்.