பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த மயில்: வனத் துறையினா் விசாரணை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த பெண் மயிலை வனத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு, நியாயவிலைக் கடை அருகே சனிக்கிழமை பெண் மயில் இறந்து கிடந்தது. தகவலறிந்த பிச்சாவரம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மயிலை கைப்பற்றி உடல்கூறாய்வு செய்து, அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தனா்.
இந்த மயில் பறக்கும்போது மின்சார கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.