தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
பள்ளி நூற்றாண்டு விழா
ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதற்கு ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் க. சிவகுருசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் எஸ். சாந்தாபேபி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ. திலகவதி பெற்றுக் கொண்டாா். விழாவில், பள்ளிக்குத் தேவையான ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கல்விச் சீராக பள்ளி மேலாண்மைக் குழு, பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் சாா்பில் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவா் எஸ். பாலச்சந்தா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் ஆா். முனியப்பன், சி. சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.