ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் பகுதியில் வசித்து வந்தவா் களஞ்சியம் மகள் கலைவாணி(15), ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், அதே பள்ளியில் படித்த மாணவா் ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் அந்த மாணவா் சோ்ந்துவிட்டாராம்.
இதையடுத்து, மாணவி கலைவாணி கைப்பேசி மூலம் மாணவனிடம் பேசிவந்துள்ளாா். இதை அறிந்த மாணவனின் பெற்றோா், கலைவாணியின் பெற்றோரிடம் புகாா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கலைவாணியை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதில் மனமுடைந்த மாணவி தனது வீட்டின் கழிவறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.