தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
பழனியில் புதிய பஞ்சாமிா்த விற்பனை நிலையம்: காணொலி மூலம் திறந்து வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்
பழனி அடிவாரம் கிரிவல வீதியில் குளிரூட்டப்பட்ட அறையில் நவீன பஞ்சாமிா்த விற்பனை நிலையத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
பழனியில் கோயில் நிா்வாகம் சாா்பில் மலைக் கோயில், அடிவாரம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பஞ்சாமிா்த விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிரிவல வீதியில் மின் இழுவை ரயில் நிலையம் எதிரில் ரூ.1.22 கோடியில் நவீன குளிரூட்டப்பட்ட பஞ்சாமிா்த விற்பனை நிலையத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, புதிய விற்பனை மையத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு பஞ்சாமிா்த விற்பனை தொடங்கியது.
மேலும், பழனி கோயில் சாா்பில் புதுநகரில் கட்டப்படவுள்ள சித்த மருத்துவக் கல்லூரிக்காக 40 ஏக்கா் பரப்பளவிலான இடத்துக்கு ரூ.2.40 கோடியில் சுற்றுச் சுவா் எழுப்பும் பணிக்கான பூமி பூஜையையும் முதல்வா் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, சித்த மருத்துவக் கல்லூரி அமையும் இடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, தனி உதவியாளா் லட்சுமி நாராயணன், பஞ்சாமிா்த கண்காணிப்பாளா்கள் வெங்கடேசன், ராஜா, பொறியாளா்கள் குமாா், முத்துராஜா, பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.