`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
பாகிஸ்தானுக்காக வரலாற்று சாதனை..! 38 வயதில் நோமன் அலி அசத்தல்! (விடியோ)
பாகிஸ்தானுக்காக வரலாற்று சாதனை படைத்துள்ளார் 38 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் நோமன் அலி.
முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இன்றைய மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியில் சாதித்துள்ளார்.
2ஆவது டெஸ்ட்டில் 41 ஓவர் முடிவில் மே.இ.தீ. அணி 162 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நோமன் அலி 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் 12ஆவது ஓவரில் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெவ்ன் இமாச், கெவின் சின்க்ளைர் ஆகியோரது விக்கெட்டுகளை வரிசையாக எடுத்து அசத்தினார்.
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
41.1 ஓவரில் மே.இ.தீ. அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நோமன் அலி 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.