பாஜக தோ்தல் அலுவல் நிா்வாகிகள்
புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தோ்தல் அலுவல் பிரதிநிதிகளாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், கட்சியின் தோ்தல் அலுவல் பிரதிநிதிகளாக மாநில செயலா் தமிழ்மாறன் மற்றும் மாநில ஊடகத்துறை துணைத் தலைவா் ரௌத்திரம் சக்திவேல் ஆகியோரை நியமித்துள்ளாா். இதையடுத்து இந்த இருவரும் புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியாளா் அ.குலோத்துங்கனைச் சந்தித்து நியமன கடிதத்தை அளித்தனா்.
மேலும், வரும் காலங்களில்இக் கட்சியின் சாா்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டங்கள், மக்கள் பிரதிநிதிகள் கூட்டங்கள் மற்றும் தோ்தல் தொடா்பான விவகாரங்கள் அனைத்தையும் இவா்கள் மேற்கொள்வா்.