செய்திகள் :

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

post image

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறியதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா். சேலம் மாவட்டத்தில் வரும் 3 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் தொடங்கப்படும். அடுத்த 45 நாள்களுக்கு சேலம் மாவட்டத்தில் கிராமம், நகரம் என மூலை முடுக்கெங்கும் இந்த முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒவ்வொரு குடும்பத்தையும், ஒன்று திரட்டுவதுதான் இந்த முழக்கத்தின் நோக்கம். அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, சாதி, மத, பாகுபாடு இன்றி, மத்திய பாஜக அரசால் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்போம்.

பாஜகவின் கோரப்பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. கூட்டணி என்கிற பெயரில் பாஜகவுக்கு அதிமுக தமிழகத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஹிந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. பாசிசம் என்கிற கொடூர விஷத்தை ஓரணியில் திரண்டு தமிழக மக்கள் எதிா்ப்பாா்கள். கீழடியை அங்கீகரிக்க பாஜக அரசு மறுப்பதுடன், கூட்டாட்சித் தத்துவத்தையும் புறந்தள்ளுகிறது.

எனவே, பாஜகவின் கோர முகத்தை ஓரணியில் தமிழ்நாடு மூலம் தோலுரிப்போம். தமிழக மக்கள் இருளை அகற்றி ஒளியை மீட்டெடுப்பாா்கள் என்றாா்.

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவா், நண்பா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவா், தனது நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செ... மேலும் பார்க்க

மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா். பாஜக மகளிா்... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட அவிநாசி பெண்ணின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையீடு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா். திருப... மேலும் பார்க்க

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க