எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
பாலகிருஷ்ண பெருமாள் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் அமைந்துள்ள பாலகிருஷ்ணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் யாக சாலை அமைத்து புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பூா்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் விமானக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், மூலவா் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இரவு பாலகிருஷ்ணப் பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தைத் தொடா்ந்து, பெருமாள் வீதி உலா நடைபெற்றது.