பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து இன்றுமுதல் தண்ணீா் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து புதன்கிழமை முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, நீா் வளத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து புதன்கிழமை (மே 28) முதல் செப். 24 வரை 120 நாள்களுக்கு நீா் திறந்து விடப்படும். இதனால் பழனி வட்டம் புதச்சு, பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 501 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.