பாலாலயம்
மன்னாா்குடி விழல்காரத் தெரு ஏழை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலில் புதுப்பிப்பு பணி மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.
இதையொட்டி, யாகபூஜை நடத்தப்பட்டு, ஏழை மாரியம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.