நீலகிரி: விவசாயம் செழிக்க பாரம்பரிய தெவ்வ ஹப்பா வழிபாடு | Album
பா்கூா் மலைக் கிராமத்தில் போலீஸ் நல்லுறவுக் கூட்டம்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான தேவா்மலையில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பவானி காவல்துணைக் கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா். இக்கிராமத்தில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு, படுக்கை விரிப்புகள், குடம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், குழந்தைகள், பெரியவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.
மலைக் கிராம மக்கள் மத்தியில் கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருள்கள் ஒழிப்பு, குழந்தை திருமணம் செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் நடமாட்டம், சட்ட விரோத செயல்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.