BB Tamil 8: "நீ என்ன 'Triangle Love' பண்ணிட்டு இருந்தயா?" - விஷாலை ரோஸ்ட் செய்த ...
பிகார்: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோா் அழைப்பு!
பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.
‘ஜன் சுராஜ்’ கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோா், பாட்னாவின் காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 4-ஆவது நாளாக இன்றும்(ஜன. 5) தொடர்கிறது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் பிரசாந்த் கிஷோா் அழைப்பு விடுத்துள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், “இந்த போராட்டமானது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்ள விழைவதாகவும், தனது அரசியல் கட்சி சார்பாக இப்போராட்த்தை முன்னெடுக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
“இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ‘யுவ சத்யாகிரக சமிதி’ என்றதொரு குழுவை 51 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவாக ஆரம்பித்துள்ளனர். இது முற்றிலும் அரசியல் சாராத இயக்கம். இதிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தோராவர். அதில் பிரசாந்த் கிஷோரும் ஓர் அங்கம். இந்த போராட்டத்தைத் தொடந்து மேற்கொள்ள 42 பேர் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட அணி திரண்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காகவும் அவர்களது கோரிக்கைக்காகவும் அவர்கள் போராட அணி திரண்டுள்ளனர்.
இதற்கு அதரவு அளிக்க வரும் அனைவரையும் வரவேற்கிறோம். 100 எம்.பி.க்கள் ஆதரவைக் கொண்ட ராகுல் காந்தியையும், 70-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவைக் கொண்டுள்ள தேஜஸ்வி யாதைவையும் வரவேற்கிறேன்.
இத்தலைவர்கள் எங்களைவிட மிகப் பெரியவர்கள். அவர்களால் 5 லட்சம் மக்களை காந்தி மைதானத்தில் அணி திரளச் செய்ய இயலும். அதைச் செய்வதற்கான நேரமும் இதுதான்” என்றார்.