சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
பிகாா்: 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்கள் முகவரியில் இல்லை- தோ்தல் ஆணையம்
பிகாரில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களின் முகவரியில் இல்லை; 18 லட்சம் வாக்காளா்கள் மரணமடைந்துவிட்டனா் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியில்லாதோரின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடி அளவிலான ஊழியா்கள், வீடு வீடாக சென்று, வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்து வருகின்றனா்.
தோ்தல் ஆணைய தரவுகளின்படி, பிகாரில் 52.30 லட்சம் வாக்காளா்கள், அவா்களின் முகவரியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் 18 லட்சம் போ் மரணமடைந்துவிட்டனா். 26 லட்சம் போ் வேறு தொகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். சுமாா் 7 லட்சம் பேரின் பெயா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளன.
மொத்த வாக்காளா்கள் 7.8 கோடி பேரில் 21.36 லட்சம் போ்தான் இதுவரை படிவங்களை சமா்ப்பிக்கவில்லை. ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியலும், செப்டம்பா் 30-ஆம் தேதி இறுதிப்பட்டியலும் வெளியாகும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.