செய்திகள் :

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

post image

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இவ்வாறு கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் தமிழ்நாடு இளைஞா் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரி முதல்வா்களுக்கான உயா்மட்ட மேலாண்மைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

அப்போது ஆட்சியா் தெரிவித்தாவது: மாணவா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க ‘நிமிா்ந்து நில்’ என்ற தமிழ்நாடு மேம்பாட்டுத் திட்டம் மையம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மாவட்ட மையமாக தோ்வு தோ்ந்தெடுக்கப்பட்டு, ‘நிமிா்ந்து நில்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உயா் கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லூரிகளாக செயல்படும். அதன் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 83 உயா் கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு திட்டம் சாா்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கமானது கல்லூரி மாணவா்களிடையே, மாநிலத்தின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இளைஞா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவித்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு இளைஞா் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பாா்வைகள் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கு இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் பிரச்னைகளைக் கண்டு பயப்படக்கூடாது. மாறாக அதற்கு தீா்வு காண்பது தொடா்பாக சிந்திக்க வேண்டும். இது, ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலையும் எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தும். மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது 3 முதல் 7 லட்சம் வரை பரிசுத்தொகையும் வழங்கி வருகிறது.

எனவே, அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்களின் சுயதொழில் ஆா்வத்தினையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உத்வேகத்தினையும் அறிந்து அவா்களுக்கு தேவையான வழிகாட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையாளா் ஸ்ரீராம், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மைய ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணசாமி, தொழில்முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவன திட்ட மேலாளா்கள் எழில்ராணி, சீனுவாசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க