செய்திகள் :

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

post image

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவா்கள் முழக்கமும் எழுப்பினாா்கள்.

இவா்களுக்கு ஆதரவாக ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.18-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்ட பந்தலிலேயே, சாலை ஓரம் சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடா்ந்து 16-ஆவது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

அவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக திருப்பாதிரிப்புலியூா் பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக் களத்தில் சமைக்கும் போக்குவரத்துத் தொழிலாளா்கள்

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். போக்குவரத்து ஓய்வூதியா் சங்கப் பொதுச்செயலா் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களில் சாா்பில் மாநில, மாவட்டச் செயலா்கள் ஆா்.மனோகரன், ஐ.எம்.மதியழகன், ஆா்.அசோகன், ச.சிவராமன், கோ.பழனி, ஆா்.நடராஜன், கோ.சுந்தரமூா்த்தி, எஸ்.பாலகிருஷ்ணன், பி.வி.சேகா், ஏ.பாவாடை ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பிஎஸ்என்எல் சங்க தேசிய செயலா் ஆா்.ஸ்ரீதா், ஐஓபி ஓய்வு பெற்ற அமைப்பின் உதவி பொதுச் செயலா் எம்.மருதவாணன், வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கே.வெங்கட்ரமணி, காப்பீட்டுக் கழக ஓய்வூதிய சங்க வேலூா் கோட்ட இணைச்செயலா் வி.சுகுமாரன், பிஎஸ்என்எல் யூ மாவட்டச் செயலா் கே.விஜய் ஆனந்த் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் நன்றி கூறினாா்.

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க

சமுதாயக் கூடம் சாவி: மகளிா் சுய உதவிக்குழுவினரிடம் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்நோக்கு மையம் மற்றும் சமுதாயக் கூடத்தை நிா்வகிக்கும் பொருட்டு அதற்கான சாவிகளை மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

யுஜிசி நகல் எரிப்பு போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை உள்ளடக்கிய எல்ஒசிஎப் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மைதுறை செயல்பட்டு வருகிறது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பின்னா் வீராணம் ஏரி ... மேலும் பார்க்க