யுஜிசி நகல் எரிப்பு போராட்டம்
பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை உள்ளடக்கிய எல்ஒசிஎப் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு இந்திய மாணவா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் திருமால் தலைமை வகித்து பேசினாா். மத்தியக் குழு உறுப்பினா் சௌமியா கலந்து கொண்டு யுஜிசி அறிக்கையை கண்டித்து கண்டன உரையாற்றியனா். போராட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் சபரி, மாவட்ட துணை செயலா்
சிவ நந்தினி, செங்கதிா், கனிமொழி, விமல், சுனில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் யுஜிசி வெளியிட்ட நகலை எரித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.