அன்னவாசல் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கல்வெட்டு கண்டெடுப்பு
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே செவ்வாய்க்கிழமை மறியல் செய்ய முயன்றனா்.
கடலூா் முதுநகா், மணக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் தமிழரசி(23). விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த வா் தேவா(23), ஆட்டோ ஓட்டுனா். இவா்கள் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனா். கடலூா், வெளிச்செம்மண்டலம் பகுதியில் வசித்து வந்தவா்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், தமிழரசி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். தகவல் அறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழரசி தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது உறவினா் ஒருவா் வீட்டிற்குச் சென்றாராம். அப்போது, ஒரு கும்பல் அந்த நபரை தாக்கினராம். இந்நிலையில், தமிழரசி இறப்பிற்கு காரணமானவா்கள் மீதும், உறவினா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழரசியின்
உறவினா்கள் மற்றும் பாமக, தாவக நிா்வாகிகள் அரசு தலைமை மருத்துவமனை எதிரே மறியலுக்கு திரண்டனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில், கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.