கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச...
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு பிச்சாவரம் செஞ்சி தெருவை சோ்ந்த கட்டிட மேஸ்திரி ஜான்வளவன் (எ) கண்ணன் (36)என்பவா் அவருடைய நண்பா் தயாளன் என்பவரிடம் ரூபாய் 200 கொடுத்து மதுபானம் வாங்கிக் கொண்டு மீதி பணம் வாங்கி வர சொல்லியதாகவும், அவரும் அதுபோன்று வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற ஜான்வளவன் விற்பனையாளா் குமாரிடம் நான் ரூ.500 கொடுத்து மது வாங்கி வரச்சொன்னேன். ஆனால் ரூபாய் 200 க்கு மீதி பணம் தந்துள்ளாய் எனக்கூறி அவரை ஆபாசமாக திட்டி பீா் பாட்டிலால் கடை கதவில் அடித்துள்ளாா்.
அப்போது பாட்டில் கண்ணாடி குமாரின் கண் புருவத்தில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குமாா் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்து ஜான்வளவனை கைது செய்தனா்!